தமிழ்நாடு

அடுத்த ஒரு மணி நேரத்தில் கனமழை: 9 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published

on

அடுத்த ஒரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வருகிறது என்பதும், இந்த மழை காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிறைந்து உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் அந்தமான் பகுதி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றியதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அறிவித்த அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version