தமிழ்நாடு

தமிழகத்தில் மழை 5 நாட்களுக்கு நீடிக்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி!

Published

on

தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 10, 11 தேதிகளில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னையில் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 11 ஆம் தேதி மிக கனமழை வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் 23 செ.மீக்கும் அதிகமாக கனமழை பெய்து உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் 2015ஆம் ஆண்டில் ஆண்டு பெய்த மழைக்கும் இப்போதைய மழைக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் 2015ஆம் ஆண்டு பொருத்தவரை தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது என்றும் ஒரு சில இடங்களில் 40 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது என்றும் கூறினார். ஆனால் இந்த ஆண்டு சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்து உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 40 சதவீதம் தமிழகத்தில் அதிக மழை பெய்துள்ளது என்றும், மற்ற மாநிலங்களில் சராசரியை விட குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் 10ஆம் தேதி மற்றும் 11ம் தேதி மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version