தமிழ்நாடு

நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் என்னென்ன பாதிப்பு வரும்?

Published

on

நாளை அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை லேசானது மற்றும் மிதமான மழை பெய்யும் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரை இன்று மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் என்றும் 40 முதல் 50 கிலோ மீட்டர் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க இன்றும் நாளையும் செல்லவேண்டாம் என்றும், அதேபோல் கேரள கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும் எனவே இந்த பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் வட மேற்கில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு வடமேற்கே நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். எனவே அடுத்த 48 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுவடையும் என்றும் அதன் பின்னர் பாதிப்பு குறித்த நிலவரம் குறித்து கணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையளவு 42 சென்டி மீட்டர் என்றும் இந்த காலகட்டத்தில் இயல்பான மழையளவு 27 செண்டி மீட்டர் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 44 சென்டிமீட்டர் என்றும் ஆனால் பதிவான மழையளவு இரு மடங்காக உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Trending

Exit mobile version