தமிழ்நாடு

8 மாதங்களுக்குப் பின் சென்னையில் ஓப்பன் ஆன ‘அந்த இடம்’! காதலர்களுக்கு கொண்டாட்டம்!!

Published

on

கொரோனா பரவல் குறைந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியதும், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், சென்னையின் சுற்றுலா தளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மெரினா கடற்கரையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், மாலையில் இனிமையாக பொழுது கழிக்கவும் என இனி வழக்கம் போல் மெரினா கடற்கரை செயல்படலாம். இதனால் சென்னைவாசிகளுக்கு குறிப்பாக காதலர்களுக்கு நிம்மதி பெருமூச்சு கிடைத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version