தமிழ்நாடு

சென்னை, மதுரை, கோவை உள்பட 21 மேயர் வேட்பாளர்கள்: திமுக அறிவிப்பு

Published

on

சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் பெருவாரியான கவுன்சிலர்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சென்னையில் மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த பிரியா என்பவர் போட்டியிடுகிறார். 50 ஆண்டு சென்னை வரலாற்றில் முதல்முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் அதிலும் தலித் பெண் ஒருவர் மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேயர் பதவிக்கு திமுக அறிவித்த வேட்பாளர்கள் பட்டியல் இதோ:

சென்னை: மேயர் வேட்பாளர் பிரியா
மதுரை: மேயர் வேட்பாளர் இந்திராணி
திருச்சி: மேயர் வேட்பாளர் அன்பழகன்
நெல்லை: மேயர் வேட்பாளர் சரவணன்
கோவை: மேயர் வேட்பாளர் கல்பனா
சேலம்: மேயர் வேட்பாளர் ராமச்சந்திரன்
திருப்பூர்: மேயர் வேட்பாளர் தினேஷ்குமார்
தூத்துக்குடி: மேயர் வேட்பாளர் ஜெகன்
ஆவடி: மேயர் வேட்பாளர் உதயகுமார்
தாம்பரம்: மேயர் வேட்பாளர் வசந்தகுமாரி
காஞ்சிபுரம்: மேயர் வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ்
வேலூர்: மேயர் வேட்பாளர் சுஜாதா அனந்தகுமார்
கடலூர்: மேயர் வேட்பாளர் சுந்தரி
தஞ்சாவூர்: மேயர் வேட்பாளர் சண். ராமநாதன்
கும்பகோணம்: மேயர் வேட்பாளர்
கரூர்: மேயர் வேட்பாளர் கவிதா கணேசன்
ஒசூர்: மேயர் வேட்பாளர் சத்யா
திண்டுக்கல்: மேயர் வேட்பாளர் இளமதி
சிவகாசி: மேயர் வேட்பாளர் சங்கீதா இன்பம்
நாகர்கோவில்: மேயர் வேட்பாளர் மகேஷ்

 

Trending

Exit mobile version