இந்தியா

2100ஆம் ஆண்டு சென்னை, கொல்கத்தா இருக்காதா.. அதிர்ச்சி தகவல்..!

Published

on

உலகம் முழுவதும் கடல் மட்டம் அதிகரித்து வருவதை அடுத்து கடலோர பகுதியில் உள்ள பல நகரங்கள் மூழ்கும் என்று ஆராய்ச்சிகள் கூறிவரும் நிலையில், 2100 ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களுக்கும் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்ற ஆராய்ச்சியின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் இரண்டு பெரிய மெட்ரோ நகரங்களான சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்கள் கடல் மட்ட உயர்வு காரணமாக மாபெரும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வளிமண்டல ஆராய்ச்சிக்கான தேசிய மையம் கடல் மட்டம் உயர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயற்கை ஏற்ற இறக்கங்கள் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் இதனால் கடலோரங்களில் உள்ள நகரங்கள் தாக்கத்திற்கு ஆளாகலாம் என்றும் கடல் மட்ட உயர்வை குறைப்பதற்கு விஞ்ஞானிகள் தகுந்த தீர்வு காண வேண்டும் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக அதிவேகமாக கடல் மட்டம் அதிகரித்து வருகிறது என்றும் சில இடங்களில் கடல் மட்டம் 20 முதல் 30 சதவீதம் வரை இன்னும் சில ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொல்கத்தா மட்டுமின்றி மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், மங்களூர் ஆகிய இந்திய நகரங்களும் 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வு அதன் காரணமாக அபாயத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு முடிவு மூலம் தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்றத்திற்கான குழுவை ஐநா சமீபத்தில் அமைத்த நிலையில் புவி ஆராய்ச்சி அமைச்சகத்தின் அறிக்கையில் வட இந்திய பெருங்கடல் சுமார் 300 மீட்டர் வரை உயரும் என்று கணித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version