வணிகம்

சென்னையில் புரொஃபஷனல் டேக்ஸ் அதிகரிப்பு – உங்களுக்கு என்ன பாதிப்பு?

Published

on

சென்னை மாநகராட்சி இன்று புதிய தீர்மானத்தை நிறைவேற்றியது, இதில் மாதம் ரூ. 21,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு தொழில்முனைவர் வரி (Professional Tax) 35% அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரி ஆண்டு இருமுறை வசூலிக்கப்படும்.

புதிய வரி திட்டத்தின் படி:

  • மாதம் ரூ. 21,000 முதல் ரூ. 30,000 வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி ரூ. 135ல் இருந்து ரூ. 185 ஆக அதிகரிக்கப்படும்.
  • மாதம் ரூ. 30,000 முதல் ரூ. 45,000 வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி ரூ. 315ல் இருந்து ரூ. 430 ஆக அதிகரிக்கப்படும்.
  • மாதம் ரூ. 45,000 முதல் ரூ. 60,000 வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி ரூ. 690ல் இருந்து ரூ. 930 ஆக அதிகரிக்கப்படும்.

இந்த தீர்மானம் பல்வேறு நிலைகளில் உள்ள ஊழியர்களின் வரி சுமையை அதிகரிக்கும் என்பதால், அவர்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வரி மாற்றங்கள் சென்னையின் தொழில்முனைவர் சமூகத்தை எப்படி பாதிக்கும் என்பது ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

புரொஃபஷனல் டேக்ஸ் என்றால் என்ன?

புரொஃபஷனல் டேக்ஸ் என்பது இந்திய மாநிலங்களில் சில உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் ஒரு மறைமுக வரியாகும். இந்த வரி அரசு அல்லது தனியார் துறை நிறுவனங்களில் வேலை செய்யும் தனிநபர் அல்லது தொழில் முறை நிபுணர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில் அல்லது வணிக நிறுவனங்களை நடத்தி வரும் தனிநபர்களுக்கு விதிக்கப்படும் வரியாகும்.

எதற்காக புரொஃபஷனல் டேக்ஸ் வசூலிக்கப்படுகிறது?

புரொஃபஷனல் டேக்ஸ் வரியானது பல்வேறு மாநிலங்களின் வருவாய்க்கு ஆதாரமாக உள்ளது. இந்த வரி மூலம் திரட்டப்படும் வருவாய், வேலைவாய்ப்பு உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுகளால் பயன்படுத்தப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version