தமிழ்நாடு

டிசி கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும்: நீதிபதி எச்சரிக்கை!

Published

on

மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணை செய்யும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் சேர்ப்பதற்காக மாணவர்கள் செல்லும்போது அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழை உடனே வழங்க வேண்டும் என்றும், கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது என்றும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக பள்ளி கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காத புகார் வரும் பட்சத்தில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்படும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாற்றுச் சான்றிதழை தர மறுப்பதாக புகார்கள் வந்துள்ளது.

இந்த புகார்கள் குறித்த வழக்கில் தான் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை அடுத்து தனியார் சுயநிதி பள்ளிகள் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version