தமிழ்நாடு

10-12 வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பா? சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

Published

on

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி என்ஜினீயரிங் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் அச்சம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தநிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு சிறந்தது என்றும் கொரோனா மூன்றாவது அலை அதிகரித்து வரும் நிலையில் நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிருங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

இந்த அறிவுறுத்தல் காரணமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கே விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தாத 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த வேண்டாம் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version