தமிழ்நாடு

நீட் குழுவுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!

Published

on

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏகே ராஜன் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றபோது மத்திய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றவுடன் நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஏகே ராஜன் என்பவரது தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு ஏற்கனவே மூன்று கட்ட ஆலோசனைகளை நடத்தி முடித்துவிட்டு விரைவில் அடுத்தகட்ட ஆலோசனை நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீட் குழு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த குழு உள்ளது என்றும் பாஜக செயலாளர் கரு நாகராஜன் என்பவர் சென்னை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தன்னுடைய விளக்கத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீட் குழுவுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு வரும் 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீட் பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக பொதுச்செயலாளர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதாலும் அனைத்து தரப்பு வாதங்களும் கேட்க வேண்டி இருப்பதாலும் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி ஏற்கனவே திமுக, மதிமுக, விசிக, மற்றும் மாணவி நந்தினி ஆகியோர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version