தமிழ்நாடு

கோயம்பேடு தக்காளி மைதானத்தில் விற்பனையை அனுமதிக்கலாமா? சென்னை ஐகோர்ட் உத்தரவு

Published

on

கோயம்பேடு தக்காளி மைதானத்தில் விற்பனையை அனுமதிக்கலாமா என்பது குறித்து விளக்கமளிக்க சிஎம்டிஏ மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் ரேஷன் கடை மற்றும் பண்ணைக்கடைகளில் தக்காளி விற்பனையை தமிழக அரசால் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்த வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கோயம்பேடு தக்காளி மைதானத்தில் விற்பனைக்கு அனுமதி கொடுத்தால் 30 முதல் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளியை விற்பனை செய்ய தயார் என்று வியாபாரிகள் சங்கத்தில் இருந்து உறுதிமொழி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கோயம்பேடு சந்தையில் உள்ள தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்கலாமா? என்பது தொடர்பாக சிஎம்டிஏ மார்க்கெட் கமிட்டி நவம்பர் 29-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தக்காளி விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் வாகனத்தை நிறுத்தி தற்காலிகமாக தக்காளி விற்பனை செய்யலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னையில் தக்காளி விலை வரும் நாட்களில் குறைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version