தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த திருத்தம் செல்லும்: உயர்நீதிமன்றம்

Published

on

தமிழ்த்தாய் வாழ்த்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த திருத்தம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீராடும் கடலுடுத்த என்று தொடங்கும் தமிழ் தாய் வாழ்த்தில் கன்னடம் தெலுங்கு மலையாளம் போன்ற வார்த்தைகள் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த திருத்தம் செல்லும் என உயர் நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பாடிய தமிழ்த்தாய் பாடலில் திருத்தம் செய்ததை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தாய் வாழ்த்து பாடலை மாற்றி அமைக்க தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது என்று தமிழக அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞரின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்று கொண்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்து திருத்தப்பட்டு தொடர்ந்து 57 ஆண்டுகள் பாடப்பட்டு வந்த நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version