தமிழ்நாடு

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனம் செல்லுமா? உயர்நீதிமன்றம் உத்தரவு

Published

on

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதிமுக கட்சியின் விதியின்படி பொதுச்செயலாளர் என்ற ஒரு பதவி மட்டுமே இருக்கும் என்றும் அவருக்கு மட்டுமே கட்சியில் புதிய பதவிகளை உருவாக்கும் அதிகாரம் உண்டு என்றும், அதிமுக விதியின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை உருவாக்க முடியாது என்றும், அதிமுக உறுப்பினர் வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்த நிலையில் அவருடைய மறைவுக்குப் பின்னர் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா அதிரடியாக நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டு அதில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது அதிமுக விதிகளுக்கு முரணானது என்றும் ஜெயலலிதா இருந்தபோது இருந்த விதிகளையே பயன்படுத்த வேண்டும் பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த சில வாரங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது. உட்கட்சி விவகாரத்தில் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும், கட்சி பிரதிநிதிகள் அளிக்கும் பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொண்டு நிர்வாகிகளை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் தேர்தல் ஆணையத்தின் முடிவு என்றும், தேர்தல் ஆணையத்தின் அந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்/ இதனை அடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version