தமிழ்நாடு

பத்திர பதிவுக்கு முன் இதனை முக்கியமாக கவனிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

Published

on

நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்களை அகற்றும் போது அந்த கட்டிடங்களுக்கு மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும், சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துகிறோம் என்றும், அதனால் எங்கள் குடியிருப்பை இடிக்க கூடாது என்றும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற்னர்.

இதுகுறித்து மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, ‘நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு முன்பாகவும், அந்த இடங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பாகவும், அந்த இடத்தை ஆய்வு செய்து அந்த இடம் நீர் நிலைகளில் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பத்திர பதிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்தது.

பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள கட்டிடங்கள் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் மின்னிணைப்பு, சொத்து வரி, குடிநீர் இணைப்பு ஆகியவற்றை ஆராயாமல் கொடுப்பதனால் அந்த இடங்கள் பத்திர பதிவு செய்யப்பட்டு விடுகிறது என்றும், இதன் பின்னர் திடீரென ஆக்கிரமிப்பு என கூறி அரசு அதிகாரிகள் அகற்றப்படும் போது அங்கு மக்கள் போராட்டங்களில் போராட்டத்தில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது என்ரும், இதனை தடுப்பதற்காக குடியிருப்புகள் மற்றும் வீட்டு மனைகள் ஆகியவை கட்டுவதற்கு முன்பாக நீர் நிலைகளில் கட்டப் படவில்லை என்பதை ஆய்வு செய்து உறுதி செய்த பின்னரே பத்திர பதிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் மின்வாரிய அதிகாரிகள் இதுபோன்ற பிரச்சினைக்கு உரிய இடங்களில் மின் இணைப்பு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அங்கு தடையில்லா சான்றிதழ் பெற்ற பின்னரே மின் இணைப்பு கொடுக்கவேண்டும் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை வசூலிப்பதற்கு முன்பு அந்த இடம் நீர்நிலை ஆக்கிரமிப்பு உள்ள இடமா? என்பதை ஆய்ந்தறிந்து சொத்து வரியை வசூலிக்க வேண்டுமென்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version