தமிழ்நாடு

வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? நீதிபதி கேள்வியால் பரபரப்பு!

Published

on

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏன் தடை செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வன்னியர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதா கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து தற்போதைய திமுக ஆட்சியில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது என்பதும் அந்த வகையில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட அனைத்து படிப்புகளிலும் மற்றும் வேலைவாய்ப்பிலும் வன்னியர் சமூகம் மாணவர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் வன்னியர் உள்ளிட்ட எம்பிசி பிரிவினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில் சிறப்பு ஒதுக்கீட்டால் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் எனவே அரசாணைக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

இதனை அடுத்து வன்னியர் இட ஒதுக்கீடு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version