தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட ஐகோர்ட் உத்தரவு!

Published

on

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அரசே டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்தி வருகிறது என்பதும் இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் கடைகளை நடத்துவது மட்டுமின்றி அரசே டாஸ்மாக் பார்களையும் நடத்தி வருகிறது என்பதையும் அந்த பார்களின் மூலம் ஏராளமான வருமானம் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மட்டுமே அனுமதி உண்டு என்றும் பார்களை நடத்த தமிழக அரசுக்கு அனுமதி இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஆறு மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை விற்க மட்டுமே அனுமதி என்றும் பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை என்றும் ஐகோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version