தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் குறித்து சென்னை ஐகோர்ட் அதிர்ச்சி கருத்து!

Published

on

அரசுத் தேர்வில் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோர உரிமை இல்லை என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி தரக்கூடிய உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் போது அவர்களுக்கு தகுதி தேர்வு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்றும் அதில் தேர்ச்சி பெற்றவர்களே ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அண்மையில் சட்டம் கொண்டுவரப்பட்டது .

அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணியில் பயிற்றுவிக்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டது .

இந்த நிலையில் இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தை நாடிய நிலையில் அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஊதிய உயர்வு கேட்க உரிமை இல்லை என்றும், ஊதிய உயர்வை நிறுத்தி தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version