தமிழ்நாடு

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: ஒருவாரம் அவகாசம் அளித்த நீதிமன்றம்!

Published

on

அகில இந்திய மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

மருத்துவ படிப்பின் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா இன்று ஆஜரானார். இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் பணி முன்னேறிய கட்டத்தில் உள்ளதாக நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

ஒபிசி இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது குறித்து பதிலளிக்க ஒரு வார காலம் அவகாசம் தேவை என வழக்கறிஞர் துஷார் மேத்தா கேட்டதை அடுத்து மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு இதுகுறித்து தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட வழக்கு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வரும் என்றும் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் இது குறித்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version