தமிழ்நாடு

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு.. ஹைகோர்ட் அதிரடி!

Published

on

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் வேகமாக தயாராகி வருகிறது. இதை முன்னிட்டு ரூபாய் 1000 பணமும் அதனுடன் பரிசு பொருட்களும் வழங்க தமிழக அரசு முடிவெடுத்து இருந்தது.

இந்த பரிசு பொருளில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவை இருக்கும். பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால் கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் அனைத்து கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்க கூடாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட், அனைத்து கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க கூடாது, முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கலாம் என்று கூறியது.

இதனால் 1.30 கோடி முன்னுரிமை அல்லாத அட்டைதாரர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்றம் இதில் தற்போது தனது உத்தரவை பிறப்பித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version