தமிழ்நாடு

ஊரடங்கில் தளர்வுகள் குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளையும் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறைந்துவிட்டதால் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயக்க வேண்டும் என்றும் கோவிலகளை திறக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

Also Read: கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறையும் தொற்று – இந்த முறை என்னென்ன தளர்வுகள்?

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது கொரோனா காலத்தில் பேருந்து இயக்கம், கோவில் திறப்பு குறித்து அரசு எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவர் குழுவுடன் ஆலோசித்து கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படுகின்றன என்றும் மூன்றாவது அலை அபாயம் உள்ள நிலையில் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Also Read: ஊரடங்கு முடிந்தவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: சசிகலா அறிவிப்பு!

ஆனால் அதே நேரத்தில் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் என்று ஆலோசனை செய்து உள்ளார் என்பதும் இன்று மாலை இது குறித்த முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
Also Read:புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதா: மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் சூர்யாவின் அதிரடி டுவிட்!

author avatar
seithichurul

Trending

Exit mobile version