தமிழ்நாடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்பதும் இந்த வழக்கில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுகவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை நடந்த நிலையில் விசாரணையின் முடிவில் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

அதிமுக தேர்தல் விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version