சினிமா செய்திகள்

’இந்தியன் 2’ பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published

on

கமலஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ பிரச்சினையை பேசி தீர்க்க மத்தியஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் நியமனம் செய்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீரென கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஷங்கர் தெலுங்கு படம் ஒன்றை இயக்கும் பணிகளில் இறங்கினார்.

இந்த நிலையில் லைகா நிறுவனம் தங்களுடைய ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரு தரப்பினரும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் இரு தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதை அடுத்து இந்த வழக்கு மேலும் தொடர்ந்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரிடமும் பேசி பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பானுமதி என்பவரை சென்னை உயர்நீதிமன்றம் மத்தியஸ்தராக நியமித்து அவர் இரு தரப்பினரும் பேசி அறிக்கை ஒன்றை அளிப்பார் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version