தமிழ்நாடு

கிண்டியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் 18 பேருக்கு கொரோனா!

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,800 நெருங்கிவிட்ட நிலையில் இன்று சுமார் 2000 பேர்கள் வரை பாசிட்டிவ் கேஸ்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதும் மீறி பள்ளி கல்லூரிகளை திறந்தால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அடுத்ததாக அலுவகங்களுக்கும் ஆப்பு வைக்கும் நிலைமை வந்து விட்டதாகவே கருதப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள மத்திய பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் முடிவுகள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஒரே நிறுவனத்தில் 18 பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அலுவலகங்களுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Trending

Exit mobile version