தமிழ்நாடு

ஒரு மணி நேரத்தில் 45 வகை சமையல்! சென்னை சிறுமி உலக சாதனை!!

Published

on

சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், ஒரு மணி நேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யுனிகோ உலக சாதனை புரிந்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த சிறுமி, தன் தாய்க்கு சமையல் நேரத்தில் பணிவிடைகளை செய்து வந்தார். அப்படியே சமையல் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார்.

சமையல் கலையில் ஆர்வம் ஏற்பட்டு பலவிதமான பதார்த்தங்களையும் செய்யத்தொடங்கினார். தங்கள் மகள் சமையலில் அசத்துவதை அறிந்த சிறுமியின் பெற்றோர், இதனை உலக சாதனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அதற்கான முயற்சியில் இறங்கினர்.

இந்த நிலையில், யுனிகோ உலக சாதனையில் இடம் பெறுவதற்காக ஒரு மணி நேரத்தில் 45 விதமான உணவு வகைகளைச் சமைக்க கற்றுக்கொண்டார். அதன்படியே, சென்னையில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சியில், சுமார் 45 விதமான உணவு வகைகளை வெறும் ஒரு மணி நேரத்தில் செய்து அசத்தினார்.

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான கம்பு, கேழ்வரகு, திணை என்பதில் தொடங்கி சிக்கன் 65, மீன்வருவல் என அத்தனை பதார்த்தங்களையும் செய்தார். அரங்கில் இருந்த அனைவரும் சிறுமியின் தனித்திறமையைக் கண்டு வியந்தனர்.

seithichurul

Trending

Exit mobile version