தமிழ்நாடு

உலக அளவில் மூன்றாமிடம் பெற்று சாதனை செய்த சென்னை: எதில் தெரியுமா?

Published

on

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சிசிடிவி என்று கூறப்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ள நகரங்களில் சென்னை மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது.

குற்றங்களை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னையில் பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

சென்னையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் உதவியால்தான் பல குற்றவாளிகள் பிடிபட்டார்கள் என்பதும் ஒருசில குற்றவாளிகள் குற்றம் செய்த ஒரு சில மணி நேரத்திலேயே சிசிடிவி கேமராவில் உதவியால் பிடிபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ள நகரங்களில் முதலாவது இடத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளது. அந்த பட்டியலில் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சிசிடிவி கேமராக்களை நிறுவிய 20 நகரங்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சராசரியாக ஒரு சதுர மைல் பரப்பளவிற்கு 1826 கேமராக்களை பொருத்தி டெல்லி முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒரு சதுர மைல் பரப்பளவிற்கு 1538 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்றாவதாக உள்ள சென்னையில் ஒரு சதுர மைல் பரப்புக்கு 610 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பட்டியலில் ஷாங்காய், சிங்கப்பூர், மாஸ்கோ, நியூயார்க் ஆகிய நகரங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முக்கிய நகரமான மும்பை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version