தமிழ்நாடு

சென்னையில் இருந்து கிளம்பிய விமான நடுவானில் திடீர் கோளாறு: பரபரப்பு தகவல்!

Published

on

சென்னையிலிருந்து சற்றுமுன் கிளம்பிய விமானம் ஒன்று நடுவானில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 08.30 மணிக்கு அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 117 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டு பிடித்ததாகவும் இதனை அடுத்து விமானத்தை உடனடியாக திருப்ப அவர் முடிவு செய்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த நிலையில் விமானத்தை தொடர்ந்து இயக்க வேண்டாம் என்றும் உடனடியாக சென்னை திரும்பும்படியும் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இதனை அடுத்து சென்னை திரும்பிய அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பதும் விமானம் தரை இறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் விமான நிலைய ஊழியர்கள் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்தமான் சென்ற விமானம் ஒரு சில நிமிடங்களில் சென்னைக்கு திரும்பி வந்ததை அடுத்து பயணிகள் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் விமானி மற்றும் விமான நிலைய ஊழியர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்னையில் விமானம் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கி ஓய்வு கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மாற்று விமானம் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version