தமிழ்நாடு

Breaking | ஈசிஆர் இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என அழைக்கப்படும்!

Published

on

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையை ஈசிஆர் என அனைவரும் அழைத்து வந்த நிலையில், இனி அது முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை துறை பவள விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ஈசிஆர் சாலை இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என அழைக்கப்படும் என அறிவித்தார்.

சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் 75வது ஆண்டு பவள விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத் துறையின் கண்காட்சியைப் பார்வையிட்டார். தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்து, பல்வேறு சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

குமரியில் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறையை இணைக்குக் கண்ணாடி இழை நடைபாதை பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் அமைச்சர் எ.வ.வேலும், மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

Trending

Exit mobile version