இந்தியா

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வந்த 20 ஆயிரம் கோடி: சென்னை தம்பதிகள் கைது!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் என்ற போதை பொருள் இந்தியாவுக்கு கடத்தப்பட்ட நிலையில் இதுசம்பந்தமாக சென்னையை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே ஆப்கானிஸ்தான் நாட்டில் தான் ஹெராயின் என்ற போதைப் பொருள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அதேநேரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில் போதைப் பொருள் விற்பனைக்கு தடை செய்ய உள்ளதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான ஹெராயின் என்ற போதைப்பொருளை வேற்று நாட்டுக்கு கடத்தி செல்ல அங்கு உள்ள போதைப்பொருள் வியாபாரிகள் முடிவு செய்தததாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் ஆப்கன் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இரண்டு கண்டெய்னர்களில் கடத்தப்பட்டு வந்த ஹெராயின் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஹெராயின் மொத்தம் 2988 எட்டு கிலோ இருந்ததாகவும் இதன் மதிப்பு சுமார் 20 ஆயிரம் கோடி என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு கண்டெய்னர்களில் உள்ள போதை பொருட்கள் ஆந்திராவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுவதால் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் தம்பதிகளிடம் விசாரணை செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தம்பதிகள் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள இந்த தம்பதிகள் குஜராத் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version