தமிழ்நாடு

இதை செய்தால் ரூ.5000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Published

on

சென்னை நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூபாய் 5000 வரை அபராதம் என எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆறு மாத காலமாக திமுக ஆட்சி ஆரம்பத்திலிருந்தே சென்னை மாநகராட்சி சென்னையை தூய்மைப்படுத்தும் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகிறது என்பதும் சென்னை மாநகராட்சியின் இந்த பணிக்கு பொதுமக்களின் பாராட்டுகள் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சென்னை மாநகரை குப்பையில்லா நகரமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றார்கள் என்பதும் குப்பைத்தொட்டி தவிர வேறு இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்கள், நீர்வள தடங்களில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்ட கூடாது என்றும் மீறி கொட்டினால் ரூபாய் 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி கேட்டுக்கொன்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் எந்தெந்த குப்பைகளை எந்தெந்த பகுதிகள் கொட்டினால் எவ்வளவு அபராதம் என்பது குறித்த விரிவான தகவலையும் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை மாநகராட்சிவெளியிட்டுள்ளது. அந்த தகவல் இதோ:

seithichurul

Trending

Exit mobile version