தமிழ்நாடு

இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Published

on

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என்றும் இல்லையேல் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: முதன்மைச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க சென்னையின் மண்டலம் 1 முதல் 15 வரை மண்டல அலுவலர்கள், மண்டல செயற்பொறியாளர்கள் மற்றும் மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் அந்தந்த மண்டல எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், விளம்பர பதாகைகள், விளம்பர தட்டிகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து விதிகளின்படி அபராத தொகையை அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை அறிக்கையாக மாநகர வருவாய் அலுவலர்கள் இன்று மாலைக்குள் அனுப்ப வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே விளம்பர பலகைகள் மற்றும் விளம்பர பேனர்களால் பல்வேறு விபத்துக்கள் நடந்த நிலையில் அனுமதியின்றி பேனர் வைப்பது மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version