தமிழ்நாடு

ஓமந்தூரார் மருத்துவமனையில் 90% நிரம்பியது: சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு!

Published

on

கொரோனா இரண்டாவது அலைகளால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 90% படுக்கைகள் நிரம்பியதை அடுத்து சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு ஒன்றை எடுத்து உள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 90% படுக்கைகள் நிரப்பி விட்டதாகவும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கிட்டத்தட்ட 50% நிரம்பி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பாதிப்பு காரணமாக படுக்கைகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனை அடுத்து சென்னை மாநகராட்சி அதிரடி முடிவை எடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க மூன்றடுக்கு படுக்கைகள் வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதேபோல் ஆக்சிஜன் தேவைப்படுவோர்களுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு கையிருப்பு வைத்திருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளுக்கு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சுமார் 12,000 படுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version