தமிழ்நாடு

குப்பையைக் கொட்ட இனி கட்டணம் வசூல்- சென்னை மாநகராட்சி அதிரடி

Published

on

சென்னையில் இனி குப்பை கொட்ட வேண்டுமானால் கட்டணம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இனி ஒவ்வொரு வீட்டுக்கும் குப்பையைக் கொட்டுவதற்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூல் செய்யப்பட உள்ளது. குறிப்பாக குப்பைகளைத் தரம் பிரித்துக் கொட்ட வேண்டும். இல்லையென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குப்பையைக் கொட்ட வணிக கட்டடங்களுக்கு 1000- 7,500 ரூபாய், உணவகங்களுக்கு 300-3,000 ரூபாய், திரையரங்கங்களுக்கு 750- 2,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட உள்ளது. இதுபோக பொது இடத்தில் வீட்டுக் குப்பைகளைக் கொட்டினால் 500 ரூபாய், பெரும் கட்டங்கள் குப்பைகளுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

Zero waste campaign: Chennaiites pledge to segregate waste at source

பொது இடங்களில் குப்பைகளை எரித்தால் 2,000 ரூபாய் அபராதம் தண்டனையாகக் கொடுக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த அதிரடி உத்தரவுக்கு தமிழக அரசின் திடக்கழிவு மேலாண்மை வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version