தமிழ்நாடு

3வது அலை எதிரொலி: சென்னையில் கூடுதல் கட்டுப்பாடுகள் என மாநகராட்சி அறிவிப்பு!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் 2500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தளர்வுகளால் மக்கள் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக புகார் வந்திருப்பதாகவும் எனவே சென்னையில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க திட்டமிட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் வார இறுதி நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் திநகர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், கடைகளில் தனியார் நிறுவனங்களில் வணிக வளாகங்களில் காய்கறி சந்தைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களான சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் வணிக வளாகங்களில் மிக அதிகமாக கூட்டம் இருப்பதாக புகார் வந்துள்ளதை அடுத்து 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மேல் அனுமதிக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version