தமிழ்நாடு

தி நகர் ரெங்கநாதன் தெருவில் அதிக கெடுபிடி: ஷாப்பிங் செல்வோர் கவனத்திற்கு!

Published

on

சென்னையில் உள்ள தி நகர் ரங்கநாதன் தெருவில் வாரந்தோறும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் மிக அதிகமான கூட்டம் இருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மிக அதிகமாக மக்கள் கூடும் இடத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதனால் இன்றும் நாளையும் தி நகர் ரங்கநாதன் தெருவுக்கு ஷாப்பிங் செல்வோர் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

சனி, ஞாயிறு கிழமைகளில் தி நகர் ரங்கநாதன் தெருவில் அதிக கூட்டம் கூடுகிறது என்றும், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கடை உரிமையாளர்கள் அனுமதிப்பதாகவும் புகார் வந்துள்ளது. இதனையடுத்து இன்று மாநகராட்சி அதிகாரிகள் தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரும் வணிக வளாகங்களிலும் சிறிய கடைகளிலும் மக்கள் கூட்டம் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதா என்பதை சென்னை மாநகராட்சி ஆணையர், வட்டார துணை ஆணையர் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்

50% க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகளை அவர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும் வியாபாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளையும் அதிகாரிகள் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றும் நாளையும் தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைக்கு செல்லும் பொதுமக்கள் ஒரு சில விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது

மாலை 3 மணிக்கு மேல் அதிக கூட்டம் இருந்தால் ரங்கநாதன் தெருவுக்கு வரும் பொதுமக்கள் வழியிலேயே நிறுத்தப்படுவார்கள் என்றும் வேறு இடங்களுக்கு செல்லுமாறு அனுப்பப்படுவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது

எனவே இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய வருபவர்கள் முன்கூட்டியே கூட்டம் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் பிளாட்பாரத்தில் கடைகள் போடக் கூடாது என்றும் காவல்துறையினர் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version