தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி மேயர் பதவி: கனிமொழிக்காகவே அரசாணையா?

Published

on

சென்னை மேயர் பதவியை பிடிக்க கனிமொழி மற்றும் உதயநிதி காய்நகர்த்துவதாக கூறப்பட்ட நிலையில் இருவருக்குமே கிடைக்காத வகையில் நேற்று வெளியான தமிழ்நாடு அரசின் அரசாணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாநகர மேயராக தான் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்பதும் அதே போல் உதயநிதி ஸ்டாலினும் சென்னை மாநகர மேயராக காய் நகர்த்தினார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திமுக எம்பியான கனிமொழியும் சென்னை மேயர் பதவியை பிடிப்பதற்காக காய் நடத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கனிமொழி மற்றும் உதயநிதி ஆகிய இருவருமே சென்னை மாநகர தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவராகவும் முதல்வராகவும் முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்றதில் இருந்து கனிமொழி ஒதுக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனை அடுத்து அவர் சென்னை மாநகர மேயர் பதவியை பிடிக்க திட்டமிட்டதாக கூறப்பட்டதால் தான் சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சென்னை போலவே தாம்பரம் நகராட்சியும் ஆவடி மாநகராட்சியும் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாநகராட்சி, திண்டுக்கல் மாநகராட்சி, வேலூர் மாநகராட்சி, கரூர் நகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி, மதுரை மாநகராட்சி, கோவை மாநகராட்சி, ஈரோடு மாநகராட்சி ஆகியவை பொதுபெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்டியல் என பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி போட்டியிடலாம் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version