தமிழ்நாடு

வீணாகும் காய்கறிகளை வைத்து எரிவாயு.. சென்னை கார்ப்ரேஷனின் புதிய திட்டம்!

Published

on

சென்னையில் வீணாகும் காய்கறி கழிவுகளைப் பயன்படுத்தி, எரிவாயு தயாரித்து விற்பனை செய்ய சென்னை கார்ப்ரேஷன் முடிவு செய்துள்ளது.

காய்கறி, உணவு போன்ற மக்கும் கழிவுகளை பயோ சிஎன்ஜி எரிவாயு மாற்றும் திட்டத்தைச் சென்னை கார்ப்ரேஷன் நீண்ட காலமாகச் செய்துவருகிறது.

தற்போது சென்னை சேத்துப்பட்டு, மாதாவாராம் என இரண்டு இடங்களில் 2 பயோ சிஎன்ஜி ஆலைகளை நிறுவி, தினமும் 100 டன் காய்கறி மற்றும் ஹோட்டல், திருமண நிகழ்வுகளில் வீணாகும் கழிவுகளைப் பயன்படுத்தி எரிவாயு உற்பத்தி செய்து, அவற்றை சிலிண்டர்களில் அடைத்து ஹோட்டல்களுக்கு விநியோகம் செது வருகின்றனர்.

இப்போது மேலும் கோயம்பேடு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மேலும் 3 ஆலைகளை நிறுவி, திடக் கழிவுகளைப் பயன்படுத்தி சிஎன்ஜி எரிவாயு உற்பத்தி செய்ய சென்னை கார்ப்ரேஷன் முடிவு செய்துள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவை, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் விரைவில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது போன்ற ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version