தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி வாகனத்தில் சிலுவை லோகாவா? பெரும் பரபரப்பு!

Published

on

சென்னை மாநகராட்சி வாகனங்களில் சிலுவை அமைப்பில் லோகோ இருப்பதாக சமூக வலைதள பயனாளிகள் சுட்டிக்காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனங்களில் சென்னை மாநகராட்சியின் லோகோவாக சிலுவை போன்று இருப்பதை சமூக வலைதள பயனாளர்கள் சில சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழகத்தை திமுக அரசு கிறிஸ்தவமயமாக்க முடிவு உள்ளதா என பாஜக, இந்து அமைப்புகள் உள்பட பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி இதற்கு விளக்கம் கொடுத்துள்ளது. தற்போது வாகனங்களில் வரையப்பட்டிருக்கும் லோகோ லைட் ஹவுஸ் என்றும், ஆனால் தவறாக வரையப்பட்டதால் கிறிஸ்துவ மதத்தின் சிலுவை போன்று தெரிவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களிலும் லோகோ மாற்றப்பட உள்ளதாகவும் ஏற்கனவே இருந்த மீன், வில் மற்றும் புலி ஆகியவை இடம் பெறும் புதிய லோகோ விரைவில் இடம்பெற வைப்பதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் லோகோ லோகோவில் லைட் ஹவுஸ் வரைவதற்கு பதிலாக சிலுவை வரைந்து இருப்பதாக சென்னை மாநகராட்சி விளக்கம் கொடுத்திருப்பதை நெட்டிசன்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version