தமிழ்நாடு

இறந்தவர்கள் உடலை பெறுவதற்கு லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Published

on

அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலியான போது அவர்களது உடலை பெறுவதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை பெறுவதற்கு அல்லது இறுதிச்சடங்கு செய்வதற்கு லஞ்சம் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் எச்சரித்துள்ளார்.

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பலியானவர்களின் உடலை பெற உறவினர்களிடம் இலஞ்சம் கேட்கப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண் ஒருவரது உடலை வழங்க 19000 மருத்துவ ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து சுகாதார ஆய்வாளர்கள் சுந்தரபெருமாள் தசரதன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதனை அடுத்து தற்போது இறந்தவர்கள் இறந்தவர்களின் உடலை பெறுவதற்கோ அல்லது ஈமச்சடங்கு செய்வதற்கும் லஞ்சம் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்க எச்சரித்துள்ளார். கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் கொரோனாவால் இறந்தவர்களின் உறவினர்களிடம் லஞ்சம் கேட்பது மனிதத்தன்மையற்ற செயல் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version