தமிழ்நாடு

தேர்தலுக்கு பிறகு இருக்கு வேடிக்கை: இப்பவே பயமுறுத்தும் சென்னை மாநகராட்சி ஆணையர்

Published

on

தேர்தலுக்குப் பின்னர் சென்னையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அதிகம் ஆகும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளது சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நேற்று சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் தமிழகத்தில் 3000ஐ நெருங்கி விட்டதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு அதிகமாகும் என்றும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் ’சட்டசபை தேர்தலுக்கு பிறகு சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அந்த கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை வைத்துப் பார்க்கும் போது சென்னையில் ஊரடங்கு உட்பட கடுமையான கட்டுப்பாடுகள் தேர்தலுக்குப் பின்னர் விதிக்கப்படும் என்று தெரிகிறது. எனவே ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதியே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version