தமிழ்நாடு

விவேக் மாரடைப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பா? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

Published

on

பிரபல காமெடி நடிகர், சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். சற்று முன்னர் அவரது உடல் மின் மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் நேற்று முன்தினம் விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வதந்திகள் உலவிக் கொண்டிருக்கும் நிலையில் இதனை தெளிவுபடுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியபோது ’விவேக் அவர்கள் செலுத்தி கொண்ட கொரோனா தடுப்பூசிக்கும் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. விவேக் அவர்களின் இழப்பு, பேரிழப்பு தான். ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசியுடன் அவருக்கு ஏற்பட்ட மாரடப்பை சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே நேற்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ குறிப்பில் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் அவருடைய மாரடைப்புக்கும் சம்பந்தம் இல்லை என தெளிவாக கூறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version