தமிழ்நாடு

ரூ.90,000 சம்பளத்தில் மருத்துவர்கள் தேவை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Published

on

சென்னையில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் தற்போது 200க்கும் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு சென்னை நகரில் ஏற்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே

இருப்பினும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தற்போது தயாராக உள்ளது. இதற்காக சென்னை மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்களை பணியில் அமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சற்றுமுன் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ரூபாய் 90 ஆயிரம் மாத சம்பளத்தில் 11 மாத காலத்திற்கு பணியாற்ற மருத்துவர்கள் தேவை என்றும், மகப்பேறு நல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், பொது மருத்துவர் தேவை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூலை 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் வரும் 27 ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து இந்த வேலைக்கு தகுதியுடைய மருத்துவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Trending

Exit mobile version