தமிழ்நாடு

சென்னையில் 20 டிகிரி செல்ஸியசுக்கு குறைவான வெப்பநிலை: கடுங்குளிர் காத்திருப்பதாக தகவல்!

Published

on

சென்னையில் 20 டிகிரி செல்ஸியசுக்கு குறைவான குறைவான வெப்பநிலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எனவே சென்னை மக்கள் கடும் குளிரை எதிர்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் தென் கிழக்கு பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மழை படிப்படியாக குறைந்து குளிர் வாட்டத் தொடங்கியது.

ஏற்கனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தற்போது குளிர் வாட்டி வரும் நிலையில் சென்னையில் 20 டிகிரி செல்ஸியசுக்கு குறைவான வெப்பநிலை இருக்கும் என்றும் தென் தமிழ்நாட்டில் குளிர் அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் இரவு நேரங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடக்கு உள் மாவட்டங்கள், கிழக்கு மாவட்டங்களில் குளிர் கடுமையாக இருக்கும் என்றும் 15 முதல் 17 டிகிரி வரை செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 18 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்றும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரை இந்த வெப்பநிலை நீடிக்கலாம் என்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே சென்னை உள்பட தமிழக மக்கள் குளிரில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தயாராகிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Trending

Exit mobile version