தமிழ்நாடு

சென்னை சாலைகளை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றுவதற்கான பணிகள் தொடக்கம்.. என்ன சிறப்பு தெரியுமா?

Published

on

சென்னை சாலைகளை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 134 கிலோ மீட்டர் சாலையை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Smart Roads

இந்த ஸ்மார்ட் சாலைகள் திட்டத்தின் கீழ், ஜிஎஸ்டி சாலை, ஜிடபிள்யூடி சாலை, வேளச்சேரி பைப்பாஸ் சாலை, அண்ணா சாலை, ஜவஹர்லால் நேரு சாலை, பூந்தமல்லி ஹை ரோடு உள்ளிட்ட சாலைகள் வருகின்றன.

ஸ்மார்ட் சாலைகளில், மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள்கள் பூமிக்கு அடியில் சரியாகப் புதைக்கப்படும். வடிகால் சரியாக சீரமைக்கப்படும். வைஃபை வசதி இருக்கும். சிசிடிவி கேமரா பொருத்தப்படும். போக்குவரத்து சிறப்பாக நிர்வகிக்கப்படும்.

Smart Roads Chennai

சாலைகளில் நடைபாதை, சைக்கிள் பாதை, வாகன நிறுத்துமிடம், ஆம்புலென்ஸ் மற்றும் பொதுப் போக்குவரத்துக்குத் தனிப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப்-2 திட்டத்தின் கீழ் சென்னை சாலைகளை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version