தமிழ்நாடு

மாஸ்டர் படத்தைத் திரையிட்ட 25 திரையரங்குகள் மீது வழக்கு!

Published

on

கொரோனா வழிகாட்டுதல்கள் இல்லாமல் மாஸ்டர் படத்தை திரையிட்ட 25 திரையரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலன்று வெளியானது. கொரோனா பரவல் குறைந்த பிறகு, கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு ரசிகர்கள் கூட்டத்தால் திரையரங்குகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

முன்னதாக திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் அதற்கு அனுமதிக்க மறுத்து, 50% இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படம் வெளியான முதல் நாளில் திரையரங்கில் கொரோனா வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், 50% இருக்கைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 25 திரையரங்குகள் மீது காவல்துறையினர் IPC 188, 269 கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மேலும் ஒவ்வொரு திரையரங்கிற்கும் 5,000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

Trending

Exit mobile version