தமிழ்நாடு

அமைதியான ரயில் நிலையம் முடிவு வாப்பஸ்: சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம்

Published

on

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் சென்ற வாரம் முதல் ஒலி அறிவிப்புகள் இல்லாத இந்தியாவின் அமைதியான ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பு வெளியான உடனே அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், எழுத்தறிவு இல்லாதவர்கள் எப்படி ரயில்களைப் பிடிப்பார்கள்.

ரயில் அறிவிப்பு பலகளைகள் பல நேரங்களில் வேலை செய்வதில்லை. அவற்றில் விளம்பரங்கள் அதிகம் வருகின்றன. ஒவ்வொரு முறையும் பயணிகள் உதவி மையம் என்று கேட்டுக்கொண்டு இருக்க முடியுமா என பல கேள்விகளை எழுப்பினார்கள்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இதில் உள்ள பல்வேறு சிக்கல்களைக் கருத்தில்கொண்டு இந்தியாவின் முதல் ஒலி அறிவிப்புகள் இல்லாத அமைதியான ரயில் நிலையம் என்ற முடிவைச் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் திரும்பப்பெற்றுள்ளது.

எனவே மீண்டும் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் புறப்பாடு மற்றும் வருகை குறித்த ஒலி அறிவிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது, ரயில் பயணிகளிடையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version