தமிழ்நாடு

சிக்னல் பிரச்சனை: சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில்போக்குவரத்து தாமதம்!

Published

on

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் புறநகர் ரயில்கள் அனைத்து பயணிகளுக்கும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அலுவலகம் செல்பவர்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது சென்னையில் புறநகர் ரயில்களில் தினமும் ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்ல இருந்த புறநகர் ரயில் புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென சிக்னல் பிரச்சினை ஏற்பட்டது. இந்த சிக்னல் பிரச்சனை காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறையினர் கூறி வருகின்றனர்.

இதனால் அவசரமாக பயணம் செய்ய வேண்டிய பயணிகள் கடும் அதிருப்தி அடைந்து பேருந்துகளில் சென்று வருவதாக கூறப்படுகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான ரயில் போக்குவரத்து சிக்னல் பிரச்சனையாக இருப்பதாகவும், இதனால் புறநகர் ரயில்சேவை 30 நிமிடம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ரயில்கள் இயங்க தாமதமாகி வருவதாகவும் ஆனால் இந்த தொழில்நுட்ப பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என்றும் ரயில்வே துறை என தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் சென்னையின் மற்ற பகுதிகளில் புறநகர் ரயில்கள் எப்போதும் போல் இயங்கி வருகின்றன என்பதும் பயணிகள் பயணம் செய்துகொண்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version