தமிழ்நாடு

சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகே பயங்கர தீ விபத்து!

Published

on

சென்னை அண்ணா சாலையில் சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகே அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் அடுக்குமாடி கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 4 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தீ விபத்து நடந்த கட்டடத்தில் பணிபுரியும் ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்பு துறையினர் மீட்டு வருவதாகவும் இதுவரை யாருக்கும் எந்தவித காயமும் இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை அண்ணாசாலையில் முக்கிய பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version