தமிழ்நாடு

அண்ணாநகர் திமுக வேட்பாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு!

Published

on

தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அவ்வப்போது வருமான வரி சோதனை நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் வீடுகள்தான் வருமான வரித்துறையினர்களால் அதிகம் குறி வைக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே திமுகவின் எ.வ.வேலு உள்பட பலர் வீடுகளில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர். அந்த வகையில் சற்று முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் திடீரென வருமானவரித் துறையினர் ரெய்டு செய்து வருகின்றனர். அங்கு அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் விரைவில் அங்கு கைப்பற்றப்படும் பணம் நகை குறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னை அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிக அளவில் விமர்சனம் செய்து வருவதால் இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் எல்லா அதிகாரமும் தற்போது தேர்தல் ஆணையத்திடம் இருக்கையில் தன்னிச்சையாக வருமான வரித்துறை சோதனை நடத்த முடியாது என்றும் அதனையும் மீறி மத்திய அரசின் தூண்டுதலினால் சோதனை நடக்கிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version