தமிழ்நாடு

சென்னை, கோவை போலீஸ் கமிஷனர்கள் திடீர் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

Published

on

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். நேற்று தமிழக முதல்வரின் தனிச் செயலாளராக 4 அதிகாரிகள் அறிவிக்கப்பட்டனர் என்பதும் அவர்கள் உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய நால்வர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இதனை அடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் அவர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதில் சென்னை மாநகர கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சங்கர் ஜிவால் என்பவர் சென்னை மாநகர கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் உளவுத்துறை டிஜிபியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டார். மேலும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளியும் மாற்றப்பட்டார் என்பதும் அவருக்கு பதிலாக தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என்று கூறப்படுவதால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version