தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு வாகனம் பார்க்கிங் வசதி.. கட்டணம் எவ்வளவு?

Published

on

சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு வாகனம் பார்க்கிங் வசதி பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளது.

இதில் 6 அடுக்குகளாக பார்க்கிங் வசதி ஏற்படு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி முதல் இந்த வாகனம் பார்க்கிங் வசதி பயன்பாட்டுக்கு வருகிறது.

ஒரே நேரத்தில் இங்கு 2150 கார்களை பார்க்கிங் செய்ய முடியும்.

கார் பார்க்கிங் கட்டணம்

கார்களை 1-2 மணிநேரம் வரை பார்க்கிங்கில் நிறுத்த 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். 2-3 மணிநேரம் 200 ரூபாய், 3- 4 மணிநேரம் 250 ரூபாய், 4-5 மணிநேரம் 280 ரூபாய், 5-6 மணிநேரம் 310 ரூபாய், 6-7 மணிநேரம் 340 ரூபாய், 7-8 மணிநேரம் 370 ரூபாய், 8-9 மணிநேரம் 400 ரூபாய், 9-10 மணிநேரம் 430 ரூபாய், 10-24 மணிநேரம் 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பைக் பார்க்கிங் கட்டணம்

இரண்டு சக்கர வாகனங்களை இங்கு பார்க்கிங் செய்ய 1-2 மணிநேரத்துக்கு 30 ரூபாய், 2-3 மணிநேரம் 40 ரூபாய், 3-4 மணிநேரம் 50 ரூபாய், 4-5 மணிநேரம் 55 ரூபாய், 5-6 மணிநேரம் 60 ரூபாய், 6-7 மணிநேரம் 65 ரூபாய், 7-8 மணிநேரம் 70 ரூபாய், 8-9 மணிநேரம் 75 ரூபாய், 9-10 மணிநேரம் 80 ரூபாய், 10-24 மணிநேரம் 90 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

டாக்ஸி பார்க்கிங் கட்டணம்

ஆப் மூலமாக புக் செய்யப்படும் டாக்ஸிங்க இங்கு இருந்து பயணிகளைக் கொண்டு செல 40 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ஷாப்பிங் மால்

விரைவில் சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் ஷாப்பிங் செய்ய மல் ஒன்றும் திறக்கப்பட உள்ளது.

திரை அரங்கம்

மால் மட்டுமல்லாமல் விமானத்திற்குக் காத்திருக்கும் நேரத்தில் திரைப்படங்கள் பார்த்து மகிழ பிவிஆர் திரை அரங்குகளும் சென்னை விமான நிலையத்தில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version